Sunday, December 22, 2013

வடமாகாண ஆளுனர் செயலகத்தில் நத்தார் புதுவருட நிகழ்வுகள்!

வடமாகாண சமூக சேவைத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண ஆளுனர் செயலகத்தில் நேற்று(21.12.2013)சனிக்கிழமை மாலை 2.30 மணிக்கு நத்தார் புதுவருட நிகழ்வுகள் நடைபெற்றது.

யாழ் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பங்குபற்றிய இந்த நத்தார் புதுவருட நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளிற்கு வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி கலந்துகொண்டு பரிசில்கள் வழங்கிவைத்ததுடன் இந்த நிகழ்வுகளில் யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜஸ்ரின், வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ராமேஸ், ஆளுனரின் செயலாளர் இ.இளங்கோவன் மற்றும் சமூக சேவைத்திணைக்களத்தின் பணிப்பாளர், உத்தியோகஸ்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com