Thursday, December 12, 2013

ஜனாதிபதி மஹிந்தவிற்கு கென்யாவில் அமோக வரேவேற்பு! கென்ய விஜயத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து –(படங்கள்)

4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று பிற்பகல் கென்யாவை சென்ற டைந்தார். ஜொமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலை யத்தில், கென்ய ஜனாதிபதி உஹூரு கென்யாட்டா மற்றும் உப ஜனாதிபதி வில்லியம் யூட்டோ ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வரவேற்றனர்.

கென்யாவின் வெளிவிவகார மற்றும் வாத்தக அமைச்சில் அமைச்சின் செயலாளர் அமீனா மொஹமட்டும் இவ்வைபவத்தில் பிரசன்னமாகி யிருந்தார். ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷவை, கென்ய ஜனாதிபதியின் பாரியரான மார்க்ரட் கென்யாட்டா வரவேற்றார். இராணுவ அணி வகுப்பு மரியாதையுடன், வரவேற்பு வைபவமொன்றும் இங்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

ஜனாதிபதி இன்றைய தினம், கென்யாவின் கஸராகி நகரில் உள்ள மொய் சர்வதேச மைதான கட்டிடத்தொகுதியில் நடைபெறும் 50வது கென்ய சுதந்திர தின வைபவத்தில் பங்கேற்கவுள்ளார். கென்யா 1963ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலி ருந்து சுதந்திரம் பெற்றது. நாளை மறுதினம் இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அரச மாளிகையில் இடம்பெறும் இப்பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கிடையில் சுற்றுலா, கலாசார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப் படவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கென்யாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஆபிரிக்க வலயத்திற்கான ஐ.நா. தலைமையகத்தையும் பார்வையிடவுள்ளார். அபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றில் அமைக்கப்பட்டுள்ள ஐ.நா. அமைப்பின் மிகப்பெரிய அலுவலகம் இதுவாகும். அதன் பணிப்பாளர் நாயகம் சாலே வெர்க் செவ்தேவையும் கென்யாவை தலைமையகமாகக் கொண்ட ஐ.நா. சுற்றாடல் செயற்திட்ட எப்டாட் நிறுவனத்தின் தலைவர்களுடனும், ஜனாதிபதி பேச்சுவார் த்தை மேற்கொள்ளவுள்ளார்.

தனது 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, இலங்கை வர்த்தக பேரவை கூட்டத்திலும் பங்குபற்றும் ஜனாதிபதி, கென்யாவின் தனியார் துறை வர்த்தக பேரவையின் 10வது ஆண்டு வைபவத்திலும் பங்கேற்கவுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், அவரது பாரியாருக்கும் கென்ய ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்துபசாரத்தில் பங்கேற்றதன் பின்னர், கென்யாவின் முன்னாள் ஜனாதிபதி காலஞ்சென்ற ஜொமோ கென்யாட்டாவின் தூபிக்கு அஞ்சலி செலுத்துவதற்கும், ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் நைரோபியில் உள்ள பௌத்த விஹாரையிலும் ஜனாதிபதி வழிபாடு களில் ஈடுபடவுள்ளார். இது, ஜனாதிபதியின் இரண்டாவது கென்ய விஜயமாகும். ஐ.நா. பொதுச்சபையின் எப்டாட் நிகழ்ச்சி நிரல் தொடர்பான விசேட அமர்வில் ஆரம்ப கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அவர், 2000ம் ஆண்டு கென்யாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம் மேற்கொண்டார்.

கென்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ ஆகியோர் கென்யாவின் 50 வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர்.

நைரோபியின் புறநகரான கசராணியிலுள்ள மொய் சர்வதேச விளையாட்டு கட்டிடத்தொகுதியில் கென்யாவின் 50 வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் இன்று காலை இடம்பெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் முதற் பெண்மனி ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷவும் அதிதிகளாக இதில் கலந்து கொண்டனர்.

1942 ஆம் ஆண்டு கிகுயூ, எம்பு, மெரு மற்றும் கம்பா கோத்திரங்களை சேர்ந்தவர்கள் சுதந்திரத்திற்காக போராட உறுதி எடுத்ததை தொடர்ந்து கென்யா சுதந்திர இயக்கம் ஆரம்பமாகியது. இதுவே மவ் மவ் இயக்கமாக வளர்ச்சியடைந்தது. அவ்வியக் கத்தில் ஈடுபாடுகாட்டியமைக்காக தற்போதைய கென்ய ஜனாதிபதியின் தந்தை ஜொமோ கெயாட்டாவுக்கு 1952 ஆம் ஆண்டு 7 வருட சிறை தண்டனை வழங்கப் பட்டது.

10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த அவர் 1962 ஆம் ஆண்டு விடுதலை யானதை தொடர்ந்து கென்யாவின் முதலாவது பிரதமராக பதிவேற்றார். 1963 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி கென்யா பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்று ஜோமோ கென்யாட்டா அந்நாட்டின் முதலாவது ஜனாதிபதியானார். இக்கொண்டாட் டங்களில் நைஜீரிய ஜனாதிபதி குட்லக் ஜொனர்தன், முன்னாள் ஜனாதிபதி ஒபசஞ்ஜோ, மாலாவயின் ஜனாதிபதி ஜொய்ஸ் பண்டா, தன்சானிய ஜனாதிபதி ஜகாயா கிக்வீட், கொங்கோ ஜனாதிபதி ஜோசப் கபிலா, எகிப்திய ஜனாதிபதி இசாயாஸ் அபவெர்க்கி உள்ளிட்ட ஆபிரிக்க தலைவர்களும் கலந்து கொண்டனர்.

1 comments :

Anonymous ,  December 12, 2013 at 3:43 PM  

Very good partners.
Somalia, Sudan, Ethiopia....missing.
All these countries have very decent, uncorrupted political system.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com