புறக்கோட்டை தீ விபத்து நாசகார செயலா? எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும்!
புறக்கோட்டை போதிராஜ மாவத்தையில் இடம்பெற்ற தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைக்கமைய நஷ்ட ஈடு வழங்கப்படும் என பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது கொழும்பு kh நகர எல்லையில் இடம்பெற்ற ஒரு சம்பவம். கொழும்பு மாநகர சபை இது தொடர்பான அறிக்கையை எம்மிடம் சமர்பிக்க வேண்டும். இது ஒரு நாசகார செயலா? என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் விடுக்கும் கோரிக்கைக்கு ஏற்ப உதவிகளை வழங்க எமது அமைச்சு நடவடிக்கை எடுக்கும்.
0 comments :
Post a Comment