உணவை பிரிண்ட் செய்து சாப்பிட முப்பரிமாண உணவு பிரிண்டர் தயார்!
கார், எலும்பு, துப்பாக்கி, கிற்றார் என்பவற்றை முப்பரிமாணப் பிரிண்டர் மூலம் உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்ட விஞ்ஞானிகள் தற்போது முப்பரிணமாண உணவு பிரிண்டரையும் உருவாக்கி அசத்தியுள்ளதுடன் இந்த முப்பரிமாண பிரிண்டருக்கு 'பூடினி' (Foodini) எனப் பெயரிட்டுள்ளனர்.
தற்போது ஆய்விலுள்ள பூடினி முப்பரிமாண பிரிண்டர் இயந்திரத்தின் மூலம் ஒரு குடும்பத்துக்கு தேவையான அனைத்து வகையான உணவுகளையும் தயார் செய்யமுடியும் என தெரிவித்துள்ளதுடன் அடுத்த வருடம் நடுப்பகுதியில் சுமார் 180,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக இதனை உருவாக்கியுள்ள பூடினி நிறுவனம் தெரிவித்துள்ளதுடன் இந்த உபகரணத்தை வீட்டு தேவை மட்டும்லாது வியாபார நோக்கத்திற்காகவும் பயன்படுத்த முடியும் என நிறுவனத்தின் இணை நிறுவரான லைநெற்றி குஷ்மா தெரிவித்துள்ளார்.
இந்த இயந்திரத்தின் மூலம் சொக்லேட் முதற்கொண்டு பலதரப்பட்ட உணவுகளையும் தன்னியக்கமாக தயார் செய்யும் என்பதுடன் பூடினி பிரிண்டரில் உணவுகளை வைத்துப் பாதுகாக்கவும் முடியும் என தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment