Saturday, December 7, 2013

யசூசி அகாசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்!!

இலங்கையின் சமாதானம், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு க்கான ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாசி உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 8ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.இவர் 8ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என ஜப்பானியத் தூதரகம் அறிவித்துள்ளது.இவர் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள், எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்திக்க வுள்ளார்.

வட மாகாண சபைக்குத் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கும் சூழ்நிலையில் இலங்கை வரும் அகாசி அரசாங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தேசிய நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறுவார் என ஜப்பானியத் தூதரகம் தெரிவித்தது.

இலங்கையின் சமாதானம், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதியாக யசூசி அகாசி நியமிக்கப்பட்ட பின்னர் 22 தடவைகள் இலங்கைக்கு விஜயம் மேற் கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத் தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com