கழிவறையில் இருந்த நபரின் ஆணுறுப்பை தீண்டியது பாம்பு! - கானாவில் சம்பவம்
பொதுக் கழிப்பறை ஒன்றில் அமர்ந்திருந்த ஆணொருவரின் ஆணுறுப்பில் பெரிய பாம்பொன்று தீண்டிய சம்பவமொன்று கானாவில் இடம்பெற்றுள்ளது. கானாவைச் சேர்ந்த க்வாபெனா க்ருமா என்ற 34 வயதான நபருக்கே இவ்வாறு பாம்பு தீண்டியுள்ளது. கடந்த புதன் கிழமை கானாவின் அஷன்டி பிராந்தியத்திலுள்ள பொதுக் கழிப்பறையில் க்ருமா அமர்ந்திருக்கும் போது அங்கிருந்த பாரிய கறுப்புப் பாம்பு ஒன்று அவரின் ஆணுறுப்பைத் தீண்டியுள்ளது.
இதனால் அவர் பாம்பு, பாம்பு என வலியால் சத்தமிட்டு அலறியுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த மற்றவர்கள் சிதறி ஓடியுள்ளனர். பின்னர் மறுபடியும் பாம்பு கொத்துவதற்கு ஆயத்தமான நிலையில் அவர் கழிவறையிலிருந்து வெளியேறியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து நடுங்கிக்கொண்டு சற்றே மயக்கமான நிலையில் இருந்தவரை விரைவாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சை முடித்துக்கொண்டு வீடு திரும்பியவர் தற்போது குணமடைந்து வருகின்றார்.
எதிர்பாராத விதமான கீழிருந்து வந்த பாம்பு தனது ஆணுறுப்பின் முனையில் கொத்தியது கடும் வலியை ஏற்படுத்தியது என க்ருமா தெரிவித்துள்ளார். இதுபோன்றதொரு சம்பவம் கடந்த ஜுலை மாதமளவில் இஸ்ரேலிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment