யாழ். போதனா வைத்தியசாலைக்கு இரத்தப் பரிசோதனைக்கு வந்த பெண்ணின் தங்கநகைகள் அபகரிப்பு!
தீவுப்பகுதியிலிருந்து இரத்தப் பரிசோதனைக்காக யாழ். போதனாவைத்தியசாலைக்கு வந்த வயோதிப பெண்ணொ ருவரின் 6 பவுண் தங்கநகைகளை வைத்தியசாலை ஊழியர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவரால் அப கரித்துச்செல்லப்பட்டுள்ளன.
யாழ்.போதனாவைத்தியசாலைக்கு இன்று வியாழக்கிழமை காலை இரத்தப் பரிசோதனைக்காக வந்த வயோதிபப் பெண் இரத்தப் பரிசோதனை செய்வதற்கு செல்லத் தயாரானபோது அவரின் தங்கநகைகளை வைத்திருப்பதாக வைத்தியசாலை ஊழியரென அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் கூறியுள்ளார்.
இதனை நம்பிய வயோதிபப் பெண் தனது தங்கநகைகளைக் கொடுத்துவிட்டு இரத்தப் பரிசோதனைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது, அந்த நபரைக் காணாது போதுதான் தனது தங்கநகைகளை குறித்த நபர் அபகரித்துச் சென்று ள்ளமை தெரியவந்துள்ளது.
0 comments :
Post a Comment