இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையின் புதிய அரசியல் பாதை! ஆபிரிக்கா மற்றும் அதனோடிணைந்த நாடுகளிற்கு இலக்கு!
ஆபிரிக்கா மற்றும் அதனோடிணைந்த வலயங்களில் உள்ள நாடுகளுடனான பழைய உறவுகளை புதுப்பித்துக் கொள் வதே இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையின் புதிய அரசியல் பாதை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கென் யாவில் தெரிவித்தார். நான் 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டவுடன் இந்த நடவடிக்கையை ஆரம்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கென்யா சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நைரோபியிலுள்ள அரச மாளிகையில் அந்நாட்டு ஜனாதிபதி உஹரு கென்யாட்டாவுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடு பட்ட போது இதனைத் தெரிவித்தார்.
கென்யாவுக்கு வருகை தந்த இலங்கையின் முதலாவது அரச தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை வரவேற்கக் கிடைத்தது, கென்யாவுக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம் என தெரிவித்த கென்யா ஜனாதிபதி கென்யாட்டா, இந்த விஜயம் எங்களது இரு நாடுகளுக்கும் இடையிலுள்ள நட்புக்கு இலக்கண மாகும் என்றும் குறிப்பிட்டார்.
கடந்த செப்டம்பர் மாதம் நைரோபி நகரத்தில் உள்ள வெஸ்ட் கேட் கடைத் தொகுதியில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகவும், ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமானத்தில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார்.
எந்த ரூபத்திலிருந்தாலும் பயங்கரவாதத்தை அனுமதிக்க முடியாது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற ரீதியில் அதனால் ஏற்படும் கஷ்டங்களை ஒடுக்க, நாங்கள் உலக மக்களோடு இணைந்து செயற்பட வேண்டும் எனவும், ஜனாதிபதி குறிப்பிட்டார். இருநாட்டுத் தலைவர்களும் தெற்கு, தெற்கின் ஒத்துழைப்பை முன்னேற்றுவதில் உள்ள முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தினார்கள். இந்த ஒத்துழைப்பு மூலம் எங்களது குரல் ஓங்கி ஒலிக்கும் என்றும் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் நடைபெற்ற 2013 பொது நாலவாய தலைவர்கள் மாநாடு தொடர் பாகவும், பயங்கரவாதத்தை தோற்கடித்ததன் பின் இலங்கை அடைந்துள்ள முன்னே ற்றம் குறித்தும், மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரி சுகளில் அநேகமானவை செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கென்யா ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினார்.
இலங்கையருக்கு கென்யாவிலும், கென்யருக்கு இலங்கையிலும் திறந்துள்ள பொருளாதார மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து நீண்ட நேரம் கலந்துரை யாடப்பட்டதுடன், பரிமாற்று வேலைத்திட்டத்தின் ஊடாக இலங்கையிலுள்ள அறி வையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்வதன் மூலம் தென்னை கைத்தொழிலை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு உதவுமாறு ஜனாதிபதி கென்யாட்டா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்த அழைப்பை கென்யா ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.
3 comments :
Hon mahinada is a great politician. he knows each and every thing. how to manage each and every country.
no politician available in srilanka other than him
Yes, Hon Mahinda is too great, he done well and doing well, the best he done LTTE Terrorist destroyed.
Mahinda can make relationship only with the corrupted countries in the world.
All alliance under China.
Post a Comment