தமிழ் மக்கள் கொழும்பில் இருக்கலாம் என்றால் ஏன் சிங்கள மக்கள் வடக்கில் குடியேற முடியாது? வட மாகாண சபையில் கேள்வி!
வடக்கிலுள்ள தமிழ் மக்கள் கொழும்பில் குடியேறியிருப்ப தைப்போல் சிங்கள மக்களும் ஏன் யாழ்ப்பாணத்தில் குடி யேற முடியாது? அவ்வாறு குடியேற முடியாதாயின் சிங்கள மக்களை நாங்கள் எங்கே கொண்டுபோய் குடியேற்றுவது' என வட மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் செனவிரத்ன எ.டி.தர்மபால கேள்வி எழுப்பினார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று(10.12.2013) செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள வட மாகாணசபை கட்டிடத்தில் நடைபெற்றபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் வலி. வடக்கில் இடம்பெறுகின்ற வீடழிப்பினை கண்டித்து கோசங்களை எழும்பியதற்கு கருத்து தெரிவிக்கை யிலேயே செனவிரத்ன எ.டி.தர்மபால மேற்கண்ட கேள்வியை எழுப்பினார்.
1 comments :
It is a reasonable question of Mr.Seveviratne A.D Dharmapala why not we put an end to our hatred.
Post a Comment