சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்டுபடுத்திய கடற்படை வீரர் - பொதுமக்களால் நையப்புடைப்பு
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் கடற்படை வீரர் ஒருவரை பிரதேச மக்கள் பிடித்து மரத்தில் கட்டிவைத்து நையப்புடைத்த சம்பவம் ஒன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.கண்டி நகருக்கு அண் மித்த பகுதியில் 11 வயதுடைய சிறுமி ஒருவர் தனது வீட்டு முற்றத்தின் முன் தனியாக விளையாடிக் கொண்டி ருந்த போது அயல் வீட்டில் வசிக்கும் சந்தேக நபரான குறித்த கடற்படை வீரர் சிறுமியிடம் மலர் ஒன்றை கொடுத்து வீட்டினுள் அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் அறிந்த பொதுமக்கள் குறித்த கடற்படை வீரரை பிடித்து மரமொன்றில் கட்டிவைத்து அடித்து பின்னர் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பொதுமக்களின் தாக்குதலுக்குள்ளான சந்தேக நபர் பலத்த காயங்களுடன் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பாதிப்புக்கள்ளான சிறுமியும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர் பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து ள்ளனர்.
0 comments :
Post a Comment