தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வதந்திகளைப் பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை: கோதபாய!
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வதந்திகளை அல்லது தகவல்களை வெளியிடும் தனிப்பட்ட நபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் எனவே தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செய்திகளை பரப்பு வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலோ அல்லது அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலோ செயற்படும் தனிப்பட்ட நபர்கள் அல்லது குழுக்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளதுடன் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
தெற்கு கடும்போக்குடைய சிங்கள அமைப்புக்கள் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுவதுடன் சிங்கள மற்றும் முஸ்லிம் கடும்போக்கு அமைப்புக்கள் தேச விரோத வதந்திகளை பரப்பி வருவதாகத் தெரிவித்ததுடன் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
2 comments :
National security is very essential for every country.There are internally and also outside of the country scare mongers play shit games against the country in order to destroy the peace order harmony and humility of the country.The government has to be careful and the Hon Defence Secretary's comments are absolutely correct.
correct decision. well done
Post a Comment