நாட்டை தலைமைதாங்கும் பலம் வாய்ந்த சந்ததி உருவாக்கப்பட வேண்டும் - மகிந்த
நாட்டிற்கு தலைமை வகிக்கும் பலம் வாய்ந்த சந்ததியொ ன்று உருவாக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸின் அல்பொசோ நகரில் நடைபெற்ற 10 வது கணித மற்றும் விஞ்ஞான போட்டியான ஒலிம்பியாட்டில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் ஜனாதிபதியை அலரி மாளிகையில் சந்தித்தனர். இச்சந்த்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை சார்பில் இப்போட்டியில் விஞ்ஞான பிரிவில் 12 பேரும், கணித பிரிவில் 9 பேரும் பங்குபற்றினர். விஞ்ஞான பிரிவில் 4 தங்க பதக்கங்களும், 5 வெள்ளிப் பதக்கங்களும், வெண்கல பதக்கங்கள் 3 உம் கிடைத்ததுடன், கணித பிரிவில் 2 வெள்ளி பதக்கங்களையும், 5 வெண்கல பதக்கங்களையும் இலங்கை மாணவர்கள் சுவிகரித்தனர்.
விஞ்ஞான பிரிவில் இப்போட்டியில் பங்குபற்றிய அனைத்து நாடுகளையும் விஞ்சும் வகையில் அதிக புள்ளிகளை பெற்று பதுளை மகா வித்தியாலய மாணவர் பிரவின் சுமனசேகர தங்க பதக்கத்தை சுவிகரித்தார். சிறந்த கலாசார பிரிவிற்கான விருது விஞ்ஞான பிரிவு மாணவர்கள் வழங்கிய விசேட நிகழ்விற்கு கிடைத்தது.
இம்மாணவர்களை பாராட்டிய ஜனாதிபதி அவர்களுக்கு சான்றிதழ்களையும் விருது களையும் வழங்கினார். இவ்வெற்றிக்கு காரணமாக ஆசிரியர்களும் கௌரவிக்கப் பட்டனர்.
சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் இம்முறையே இலங்கை அதிக பதக்கங்களை வென்றெடுத்தது. இந்தியா, சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்குபற்றினர். இப்போட்டியில் இலங்கை 2 ஆம் இடத்தை பெற்றது. விளையாட்டு அல்லது கல்வியில் ஏனைய நாடுகளுடன் போட்டியிட்டு வெற்றிபெறுவோரை கௌரவிப்பது அரசின் கடமையும் பொறுப்புமென ஜனாதிபதி இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார்.
விளையாட்டிலோ அல்லது கல்வியிலோ ஏனைய நாடுகளுடன் போட்டியிட்டு வெற்றிபெறுவோரை பாராட்டுவது எமது கடமையும் பொறுப்புமென்பதே எனது கருத்தாகும். இதன் மூலம் நாட்டிற்கு பெரும் புகழ் கிடைக்கின்றது. இது போன்ற கல்வி நிகழ்ச்சிகளில் வெற்றி பெறுவது மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு வழி வகுக்கும். இதன் மூலம் மாணவர்கள் சிறந்த அனுபங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.
30 வருட யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு எதிர்கால சந்தத்தியினருக்காக நாடு தயார்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு இந்நாட்டை தலைமைதாங்கும் பலம் வாய்ந்த சந்ததி உருவாக்கப்பட வேண்டும். நீங்கள் பெற்ற வெ ற்றி உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் பெற்றோருக்கும் பெரும் கௌரவத்தை பெற்றுத் தந்துள்ளது. பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களுக்கும் இது பெரும் உந்து சக்தியர்கும். எமக்கும் கூட பெருமையே. உங்களது வெற்றி எமது வெற்றியாகும். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment