தெற்கின் அடுத்த முதலமைச்சர் நானே! - கீதா
“தென் மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் நானே” என பெந்தர எல்பிடிய ஸ்ரீ.ல.சு.கட்சியின் பிரதான அமைப்பாளர் கீதா குமாரசிங்க குறிப்பிடுகிறார். தவலம தேசிய பாடசாலையில் இடம்பெற்ற பாலர் பாடசாலை விழாவொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள் ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் –
“வெகுவிரைவில் மேல்மாகாண – தென் மாகாண சபைகள் கலைக்கப்படவுள்ளன. இனி நானும் தென் மாகாண சபைக்குப் போட்டியிட்டு வெற்றி பெறுவதைப் போலவே முதலமைச்சரும் ஆவேன்.
நான் இப்போது ஒரு மாகாண சபை உறுப்பினர் அல்ல. சம்பாதிப்பதற்காகவல்ல நான் அரசியலில் நுழைந்தது. நான் தேடியவற்றையும் பொதுமக்களுக்காகச் செலவுசெய்பவள். என்னிடம் இருந்தவற்றையும் நான் இல்லாமலாக்கிக் கொண்டேனே தவிர, அரசியலுக்கு வந்து எதுவும் தேடிக்கொள்ளவில்லை. அதனால் தென் மாகாண முதலமைச்சராக என்னால் முடியும். அதற்கான உரிமையும் எனக்கிருக்கின்றது. நான் மிகவும் பொறுப்புடனேயே அதனைத் தெரிவிக்கிறேன்.
இனிப்பை நாடியல்லவா எறும்புகள் செல்கின்றன. நான் பெண்ணல்லவா என்மீது பார்வை நிச்சயம் படும். பொதுமக்கள் என்னுடன் இருக்கின்றார்கள். அதனைச் சிலரால் சீரணிக்க முடியாதிருக்கும். அதுதான் ஒவ்வொரு கதை உருவாக்குகின்றார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment