Monday, December 2, 2013

பிரான்ஸ் நாட்டு போதைப் பொருள் வியாபார முக்கிய புள்ளி இலங்கையில் இருந்து நாடு கடத்தல்!!!

கொகேய்ன் போதைப் பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்து, உல்லாச பிரயாணிகளுக்கு திருட்டுத்தனமாகவும் இரகசியமாகவும் வியாபாரம் செய்வதாகக் சந்தேகிக்கப் படும் சில்வான் லுப்லிஸ் என்ற பிரான்ஸ் நாட்டுக்கார ரும் மற்றும் நால்வரும் குடிவரவு குடியகல்வு புலனாய்வுப் பிரிவினரிடம் சிக்கியுள்ளனர்.உல்லாச வீஸாவில் வந்து சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வெளி நாட்டவர்களைப் பிடிப்பதற்காக குடிவரவு குடியகல்வு புலனாய்வுப் பிரிவினர் நாடு முழுவதும் மேற்கொள்ளும் நடவடிக்கையின் போதே இவர்கள் சிக்கியுள்ளனர்.

ஹிக்கடுவையில் சட்டவிரோத ஹோட்டல் வர்த்தகத்தை மேற்கொண்டமை தொடர்பாக புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கைது செய்து விசாரணைக்குப் பின்னர் நாடு கடத்தியுள்ளனர். இவரின் கையாட்கள் நால்வரைக் கைது செய்த பின் ஹிக்கடுவை பகுதியில் ஆயிரக்கணக்கான உல்லாச பிரயாணிகளுக்கு கொகேய்ன் போதைப் பொருளை இவர் விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

உல்லாச பிரயாண வீஸா பெற்ற இரண்டு மூன்று தினங்கள் இலங்கைக்கு வந்து சப்பாத்துக்களிலும் மற்றும் சூட்சுமமான முறைகளிலும் இவர்கள் போதைப் பொருளை மறைத்து கொண்டுவந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள் ளது.'ஸ்கைப்' மூலமும் இவர்கள் பேசி இந்த வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளனர். ஹிக்கடுவை பகுதியில் உல்லாச பிரயாணத் தொழிலில் ஈடுபட்டுள்ள உள்ளூர் வியாபாரிகளுக்கு இந்த நபரின் கொகேய்ன் வியாபாரம் குறித்து தகவல்கள் தெரிந்திருக்கவில்லையாம்.

வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இலங்கையர்களுக்கு இதனை விற்பனை செய்தால் தகவல்கள் வெளியாகும் என்பதால் அவ்வாறு செய்யவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. இந்த வியாபாரியை நாடு கடத்திய பின்னர் ஹிக்கடுவை பகுதியிலுள்ள உள்ளூர் வர்த்தகர்கள் பலர் குடிவரவு குடியகல்வு புலனாய்வு பிரிவினரைப் பாராட்டி உள்ளனர்.குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு ஜெனரல் சூலானந்த பெரேராவின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். நால்வருள் ஒரு பெண்ணும் உள்ளனர். இவர்கள் நாடு கடத்தப்படவில்லை. தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment