Friday, December 20, 2013

ஆசிரியை துண்டு துண்டாக வெட்டி படுகொலை! கணவன் கைது !

ஆசிரியை ஒருவரை துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடலின் பாகங்களை பொலீசார் கைப்பற்றியுள்ளனர் இதுதொடர்பாக அவரது கணவன் கைது செய்யப்பட்டார். சென்னை அடுத்த சோழ வரம் அருகேயுள்ள காரனோடை பஜார் பகுதியை சேர்ந் தவர் பரமசிவம் (45). மேற்கு மாம்பலத்தில் உள்ள தனியார் கம்பெனியில் சீனியர் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் அருணகிரிபுரம் 3வது தெருவை சேர்ந்த ஜெகநாதன் மகள் காந்திமதிக்கும் (41) கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. காந்திமதி திருவண்ணாமலை ஒன்றியம் சக்கரத்தாமடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். ஏற்கனவே திருமண மாகி விவாகரத்து ஆனவர்.

பத்திரிகையில் விளம்பரம் செய்து, காந்திமதியை பரமசிவம் திருமணம் செய்து ள்ளார். இதையடுத்து திருவண்ணாமலை பகுதியில் இருந்து மாறுதலாகி கடந்த ஜூன் 11ம் தேதி சோழவரம் அடுத்த நெடுவரம்பாக்கம் ஒன்றிய நடுநிலைப்பள் ளிக்கு ஆசிரியை வேலைக்கு வந்துள்ளார் காந்திமதி.

இந்நிலையில் நேற்று காலை பரமசிவத்தின் அக்கா அங்கு வந்துள்ளார். அப்போது வீட்டு கதவு பூட்டியிருந்தது. வீட்டின் உரிமையாளர் சையத் அமீனிடம் விசாரித்த போது, அவர்கள் வெளியில் போயிருக்கலாம் என்று கூறியுள்ளார். அதற்கு உங்க ளிடம் உள்ள சாவியை கொடுங்கள் என்று கேட்டு வாங்கி கதவை திறந்து அக்கா உள்ளே சென்றுள்ளார்.

அப்போது வீட்டுக்குள் கடுமையான பிண நாற்றம் வீசியது. அதிர்ச்சி அடைந்து வீடு முழுவதும் தேடியபோது, குளியலறையில் காந்திமதியின் கால்கள் மற்றும் தொப்புள் வரையான வயிற்று பகுதி மட்டும் கிடந்தது. இதனால் திடுக்கிட்டுப்போன பரமசிவத்தின் அக்கா சையத் அமீனிடம் சம்பவம் தொடர்பாக கூற அவர் உடனடி யாக சோழவரம் பொலீசுக்கு தகவல் கொடுத்தார்.

பொலீசார் விரைந்து வந்தனர். அப்போது பரமசிவம் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், ஒரு கை, மார்பின் ஒரு பகுதி செங்காலம்மன் கோயில் எதிரில் உள்ள செம்புலியாவரம் முள்புதரில் போடப் பட்டிருப்பது தெரியவந்து. அங்கு சென்று உடலின் அந்த பகுதியை பொலீசார் கைப் பற்றினர்.

பொலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு:

பரமசிவம், காந்திமதி இடையே கடந்த சனிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர், பரமசிவத்தின் சின்ன அக்காவுக்கு போன் செய்து உங்கள் தம்பி என்னை அடித்து சித்ரவதை செய்கிறார், உடனே வாருங்கள் என்று அழைத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பரமசிவம், ஏன் என் அக்காவிடம் சொல்கிறாய்? என்று கேட்டு காந்திமதியை பிடித்து சுவரில் தள்ளியுள்ளார். இதில் தலையில் பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே காந்திமதி ரத்தவெள்ளத்தில் சுருண்டுவிழுந்து இறந்துள்ளார்.

போதையில் இருந்து பரமசிவம் இரவில் அங்கேயே படுத்து தூங்கியுள்ளார். மறுநாள் காலையில் எழுந்தவர், அக்காவுக்கு போன் செய்து, காந்திமதி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதை நான் பார்த்துவிட்டேன். அதனால்தான் அவளை அடித்தேன். இதில் நீ தலையிடாதே, இங்கு வராதே என்று கூறியுள்ளார்.

பின்னர் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி குடித்துவிட்டு பெட்ரோல் வாங்கி வந்துள்ளார். மனைவியின் உடலில் தீவைத்துள்ளார். புகை வீடு முழுவதும் பரவவே தீயை அணைத்து விட்டு காந்திமதியின் உடலை 3 துண்டாக வெட்டி ஆங்காங்கே போட்டுள்ளார். என பொலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் தலை, மற்றொரு கை மற்றும் மார்பு பகுதியை யானைக்கவுனி பகுதியில் போட்டுள்ளதாக பரமசிவம் கூறினார். இதனால் அவருடன் பொலீசார் தலை பகுதியை தேடி சென்றனர். யானைக்கவுனி பொலீஸ் நிலையம் பின்புறம் உள்ள கால்வாய் கரையோரம் போடப்பட்டிருந்த காந்திமதியின் தலை, கை, மார்பு பகுதியை பொலீசார் நேற்று மாலை கைப்பற்றினர்.

கால்கள், உடல், தலையை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பரமசிவம் ஏற்கனவே சைகோ நிலையில் இருந்ததாக அவரது அக்கா மற்றும் உறவினர்கள் கூறியுள்ளனர் எனினும் கணவன் சைகோவானதால் கொலை நடந்ததா, அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா என்றும் விசாரணை நடக்கிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com