Monday, December 30, 2013

பொலிஸாருக்கெதிராக பொதுமக்கள் முறைப்பாடுகளை மேற்கொள்ள அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் எவரேனும் பாதிக்கப்பட்டால் பொலிஸாருக்கு எதிராக பொதுமக்கள் முறைப்பாடுகளை செய்வதற்காக புதிய அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செய லாளர் டி.எம்.கே.பீ தென்னக்கோன் தெரிவித்தார்.

இதற்கமைய 0710 36 10 10 என்ற இலக்கத்திற்கு பொது மக்கள் தமது முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என ஆணைக்குழுவின் செயலாளர் டி.எம்.கே.பி.தென்னகோன் தெரிவித்துள்ளார். குறித்த இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி முறையிடலாம் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரை பொலிஸாருக்கு எதிராக சுமார் 400 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment