உப்புவெளி வில்கம்வெஹர பகுதியில் வாகனங்களுக்கு தீ வைப்பு!
திருகோணமலை-அநுராதபுரம் வீதியில் உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வில்கம்வெஹர பகுதியில் புதிதாக அமைக் கப்பட்டுள்ள வாவிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஸ்கெச்டர் மற்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் தீக்கிரையா க்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் காவலாளி ஒருவர் நிறுத்தி வைக்கப்பட்டிந்த நிலையில் நேற்று இரவு 10.55 அளவில் அங்கு சென்ற 7 பேர் கொண்ட குழு காவலாளியை தாக்கிவிட்டு வாகனங்களுக்கு தீ வைத்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து தகவலறிந்த உப்புவெளி பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுடன் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் உப்புவெளி பொலிஸார் விசார ணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வேளை இந்த தீவைப்ப்பு சந்தர்ப்பத்தால் 95 லட்சம் ரூபாவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment