ஜோடியாக இணைந்து ஒருவரை கொலை செய்த புதுமணத் தம்பதி கைது!
புதிதாக திருமணம் செய்தபின் ஜோடியாக இணைந்து கொலை செய்ய வேண்டுமென்ற ஆசையினால் ஒருவரை கொலை செய்த தம்பதியொன்று அமெரிக்கா பென்சில்வே னியா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான எலைட் பார்பர் மற்றும் 18 வயதான மிரண்டா பார்பர் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்னர்.
இவர்கள் திருமணம் செய்து 3 வாரங்களேயான நிலையில் 42 வயதான டொரி லபாரெரா என்பவரை ஆசை காட்டி தம்மை சந்திப்பதற்கு வீட்டுக்கு வரவழைத்த பின் அவரை கொலை செய்யததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதே வேளை ஜோடியாக கொலை செய்யும் நோக்குடன் லபாரெராவை தாம் கொன்றதை இத்தம்பதியினர் ஒப்புகொண்டதுடன் இதற்குமுன் பலரை கொல்ல முயன்றதாகவும் ஆனால் அம்முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை எனவும் எலைட் பார்பர் கூறியுள்ளார்.
இதே வேளை இதற்குமுன் நடைபெற்ற மர்மமான கொலைகளுக்கும் இத்தம்பதி யினருக்கும் ஏதும் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்தும் பொலிஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments :
Post a Comment