சுற்றுலாவிற்காக இஸ்லாமிய கலாசாரங்களை விட்டுக் கொடுத்த பல்கலை மாணவிகள்!
கல்வி சுற்றுலா சென்ற யாழ் பல்கலைக்கழக நான்காம் வருட சித்திரமும் வடிவமைப்பும் துறை மாணவர்களில் முஸ்லீம் மாணவிகள் வரலாற்று முக்கியத்துவ இடங் களை பார்க்க அனுமதிக்கப்படாத காரணத்தால் வெளியில் காத்திருந்த சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது.
இவர்களின் இந்தச்சுற்றுலா இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிடுவதற்காக அமைந்ததுடன், நேற்று காலை அனுராதபுரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பார்வையிட சென்றபோது இவர்களுடன் வந்த முஸ்லீம் மாணவிகளை அங்கு காவற்கடமையில் இருந்தவர்கள் அனுமதியாது தடுத்துள்ளனர்.
குறித்த இடத்தை பார்ப்பதாயின், முஸ்லீம் மாணவிகள் அணிந்திருந்த முக்காடு, ஹிஜாப் என்பன அகற்றப்பட வேண்டும் என தெரிவித்ததால் அம்மாணவிகள் ஏனைய மாணவர்கள் போன்று குறித்த இடங்களை பார்க்க முடியாமல் போனதை கண்ட சக மாணவர்கள் முஸ்லீம் மாணவிகள் தலையில் அணிந்து வந்த முக்காடு ஹிஜாப் போன்றவற்றை களையுமாறு வேண்டியதை தொடர்ந்து தமது முக்காடு ஹிஜாப் களைந்துவிட்டு மாணவர்களுடன் ஒன்றாக சேர்ந்து வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பார்வையிட்டனர்.
குறிப்பாக வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பார்வையிட வரும் போது அங்கு பாதுகாப்பு கடமையில் உள்ளவர்களால் செருப்பு மற்றும் தொப்பி என்பன அணிவதை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 comments :
மாணவிகளுக்கு பாராட்டுக்கள் உலகத்தோடு ஒத்து வாழ வேண்டும். பெண்ணடிமைதனம் நிராகரிக்கபடவேண்டும்.
Very Good
முன்னர் இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்கள் அரேபிய கலாச்சார உடைகளை அணிந்து தங்களை தனிமைப்படுத்தியது கிடையாது. இவ்வகையான அரேபிய கலாச்சாரம் தமிழ், சிங்கள கலவரங்களுக்கு பின்னரே தோன்றின. முஸ்லிம்கள் தங்களை தமிழ் மக்களிடமிருந்து பிரித்து காட்டுவதற்காகவே அத்தகைய உடை, நடைகளை மாற்றிகொண்டார்கள். தற்காலத்தில் அவை முஸ்லிம் மதவாத தீவிரவாதத்தால் கட்டாயமாக்கப்பட்டு, மக்களுக்கு திணிக்கப்பட்டு வருகின்றது. உண்மையில் அதனால் முஸ்லிம் மக்களுக்கு பாதிப்புக்கள் மட்டுமே அதிகம். எதிகாலங்களில் பெண்கள் படிக்கவும், வேலை செய்யவும் முடியாது போகலாம். இலங்கை மக்களே! எந்த ஒரு முட்டாள் தனமாக மதவாதங்களுக்கும் இடமளிக்க வேண்டாம். !!
Al Hakeem
முகத்தை மூடுவது பெண் அடிமைத்தனம் என்பது மூடத்தனம். வெளியே நின்று கூச்சலிடுவதை விட உண்மை அறிந்து கொள்வது சாலச்சிறந்தது. சிலருக்கு உரித்த மாம்பழம் போலவே பெண்கள் வேண்டும்.. விபசாரத்திற்கு வித்திட வேண்டாம்... சகோதரர்களே..விதண்டாவாதம் வேண்டாம் ... மூடநம்பிக்கை என்றால்... அடுக்கிக்கண்டே போகலாம் ..... வேணாம்..
இலங்கை முஸ்லிம் மதவாத தீவிரவாதத்தால் மக்களுக்கு பாதிப்புக்கள் மட்டுமே அதிகம். எதிகாலங்களில் முஸ்லிம் பெண்கள் படிக்கவும், வேலை செய்யவும் முடியாது போகலாம்.
மக்களே! எந்த ஒரு முட்டாள் மதவாதங்களுக்கும் இடமளிக்க வேண்டாம்.
Post a Comment