பெண்ணாக மாறிய பாம்பு! கானாவில் சம்பவம்
கானாவில் உயிர் போகும் தருவாயில் இருந்த பாம்பு பெண்ணாக மாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகே இருந்த பாம்பை கொல்ல முயன்றபோது, அங்கே மக்கள் கூட்டம் திரண்டது. பின்னர் மக்கள் அதைக் கொல்ல முயன்ற போது, அது திடீரென ஒரு பெண்ணாக உருமாறியுள்ளதாம்.
இது பற்றி எபாஹ் குறிப்பிடுகையில் பாம்பு பெண்ணாக உருவானதாக மக்கள் கூச்சலிடுகையில், அந்தப் பெண் கோபத்துடன் ‘உருமாறினால் என்ன?’ எனக் குறிப்பிட்டதாக கூறியுள்ளார்.
பின்பு அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் அப்பெண்ணை அழைத்துச் சென்று தங்களது பாதுகாப்பின் கீழ் வைத்துள்ளனர். இது பற்றிக் காவல் துறையினர் கூறுகையில், அது ஒரு பாம்புப் பெண் அல்ல. அவர் மனநிலை பாதிக்கப்பட்டு வெகு நாட்களாக அவர்களது குடும்பத்தாரால் தேடப்படும் பெண் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ்வாறு ஒரு பெண் பாம்பாக மாறுவது நடக்க முடியாத ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment