Wednesday, December 4, 2013

விபச்சாரம் சட்டரீதியாக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கு எதிராக ஹட்சன்! அதற்கெதிராக ரணிலின் மனைவி தலைமை!

பொலிஸாரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் சுலோகக் கோஷம்

இலங்கையினுள் விபச்சாரத் தொழிலை சட்ட ரீதியாக்க வேண்டும் என்று நிமல்கா பிரனாந்து முன்வைத்த கருத்திற்கு எதிராக காரசாரமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க கருத்து வெளியிட்டார் எனக்கூறி, அவருக்கு எதிராக நோற்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திற்கு முன்பாக பெண்கள் கூட்டணியினால் நடாத்தப்பட்ட எதிர்ப்பார்ப்பாட்டத்தில் நிமல்கா பிரனாந்து, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்ரி விக்கிரமசிங்க உட்பட பெருந்திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்ட பெண்களை பொலிஸார் அவ்விடத்திலிருந்து விரட்டியதுடன், அவர்கள் ஏந்தியிருந்த எதிர்ப்புச் சுலோகங்களையும் கிழித்து வீசியெறிந்துள்ளனர்.

எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்ட பெண்கள் பொலிஸார் பற்றிக் கவனத்திற் கொள்ளாது தொடர்ந்து சுலோகங்களை உரத்துச் சொல்லலாயினர். அவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும்போது, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் ரணகலவினால் அழைத்துவரப்பட்ட பெண் பொலிஸ்படை அணியினரும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் கூடியிருந்த பெண்களை அருகிலமைந்திருந்த பஸ் தரிப்பு நிலையம் வரை விரட்டிச் சென்றனர். பின்னர் மீண்டும் அவ்விடத்திலிருந்து பௌத்தலோக்க மாவத்தை வரை விரட்டிச் சென்றனர். மீண்டும் பெண்கள் கூட்டணியினர் பௌத்தாலோக்க மாவத்தை நடுவீதியில் நின்றவாறு சுலோகங்களை உரக்கச் சொல்லி தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் மனைவியான மைத்ரி விக்கிரமசிங்க பி.ப. 4.40 மணிக்கு நடுவீதியில் வாகனத்தை நிறுத்தி, எதிர்ப்பார்ப்பாட்டத்தில் தானும் கலந்துகொண்டார். ஐக்கிய இலங்கை பெண்கள் முன்னணியின் தலைவியும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சாந்தினி கோன்கஹகேவும் எதிர்ப்பார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

பொலிஸார் அடிக்கடி கூடியிருந்த பெண்களை கலைத்தபோதும், மீண்டும் மீண்டும் சுலோகங்களை வாசிப்பதற்கு உறுதுணையாக வழக்கறிஞர் நிமல்கா பிரனாந்து உறுதுணையாக நின்றார்.

அவர் முதலாவது சுலோகத்தை வாசிக்கும்போது, கலாநிதி சேபாலி கோட்டேகொட ஜானகி சில்வா, சந்யா எக்நெலிகொட, சாந்தினி கோன்கஹகே, மைத்ரி விக்கிரமசிங்க உட்பட பேர் பெற்ற பல பெண்கள் பெருஞ் சத்தத்துடன் சுலோகங்களை வாசிக்கும்போது அவ்விடத்திற்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உள்ளிருந்து வருகை தந்த சிலர் அவர்களிடம், டொலர்களுக்காகத்தானே உரக்கக் கத்துகிறீர்கள்? பணம் கொடுத்து இவ்வளவா கிடைத்தது? ரணில் மாமாவுக்கு வரச் சொல்லுங்கள் என்று வீதியின் நடுவிலிருந்து கத்தும்போது, பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் ரணகல, தலைமை பொலிஸ் பரீட்சகர் பீ.கே.கே.கே. பிரேமதாச உட்பட பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எதிர்ப்பார்ப்பார்ப்பாட்டக்காரர்களை புலர்ஸ் குறுக்கு வீதிவரை விரட்டினர். அங்கு சாந்தினி கோன்கஹகே மீண்டும் சுலோகத்தை வாசிக்கத் தொடங்கினார்.

பொலிஸார் அவ்விடத்திற்கு வந்து, மீண்டும் புலர்ஸ் குறுக்கு வீதியிலிருந்து ஜீ.பீ. மலலசேக்கர மாவத்தை வரை விரட்டினர்.

ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலிருந்து அங்கு வந்திருந்தவர்கள் “ஹு“ சத்தமிட பதிலுக்கு பெண்கள் கூட்டணியும் இடைக்கிடையே “ஹு“ சத்தம் இட்டனர்.

அவ்வேளை, வீதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது. அவ்விடத்திற்கு வருகை தந்த பிரேமலால் ரணகல கூடியிருந்த பெண்களுடன் பேசியபோதும், அப்பெண்கள் அதனை காதில் வாங்கிக் கொள்ளாது தொடர்ந்தும் சுலோகங்களை வாசித்து எதிர்ப்புத் தெரிவித்தனர் பெண்கள் கூட்டணியினர்.

ஹட்சன் சமரசிங்கவின் நல்லொழுக்கம்தான் என்ன?
மக்களுக்குரிய வானொலியை அதள பாதாளத்தில் தள்ளாதே!
மொழிச் சுதந்திரம் ஹட்சனுக்கு மட்டுந்தானா?
மக்கள் வானொலியில் அம்மணம் பாடுவதா?
ஹட்சனின் நல்லொழுக்கம் இதுதானா?

போன்ற சுலோகங்களையே பெண்கள் கூட்டணி கூறினர்.

-மவ்பிமவிலிருந்து கலைமகன் பைரூஸ்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com