ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் மேல் மாகாண சபை கலைக்கப்படுமாம் - தினேஷ்
ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் மேல் மாகாண சபை கலைக்கப்படும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரி வித்தார். கொழும்பு கிரான்ட்பாஸ் வீதியிலுள்ள 130ம, 180ம் தோட்டங்களுக்கு செல்லும் பாதைகள் செப்பனிடப்பட்டு திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் தினேஸ் குணவர்தன இதனை தெரிவித்தார்.
இதற்கென 20 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.எம்.மன்சிலின் வேண்டுகோளின் பேரில் மகநெகும திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ 50 இலட்சம் ரூபாவை வீதி அபிவிருத்தி அதிகார சபையூடாக ஒதுக்கியுள்ளார்.
தென்னாபிரிக்கா உட்பட கென்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியவுடன் மேல்மாகாண சபை கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன அங்கு தெரிவித்தார்.
0 comments :
Post a Comment