சவூதி இளவரசர் ஒருவர் தன்னுடன் தங்கியிருந்த சக சவூதி அரேபியர் ஒருவரை கொலை செய்துவிட்ட சம்பவம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மரணதண்டனை தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
சவூதி அரேபியாவை பெறுத்தவரை கொலையாளி சார்பில், கொலை செய்யப்பட்டவர் குடும்பத்துக்கு ஒரு பெருந்தொகையை கொடுத்து விட்டால் அவர்கள் மன்னித்து விடுவார்கள் இதன் மூலம் கொலையாளி தண்டனையில் இருந்து தப்பி விட முடியும் ஆனால் இந்த வழக்கை பொறுத்தமட்டில் இளவரசர் தரப்பில் தரக்கூடிய தொகையை பெற்றுக்கொண்டு, மன்னிப்பு வழங்க கொலை செய்யப்பட்டவர் குடும்பம் முன்வராததால் சவூதி இளவரசருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நிலை உருவாகி உள்ளது.
இதுமட்டுமல்லாது இதற்கான அனுமதியை சவூதி பட்டத்து இளவரசர் சல்மான் வழங்கி விட்டதாக அந்த நாட்டிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று தகவல்கள் வெளியிட்டுள்ளது.
மேலும் பட்டத்து இளவரசர் சல்மான் உள்துறை மந்திரி முகமது பின் நயீப்புக்கு அனுப்பியுள்ள தகவல் அறிக்கையில், ‘ஷரியத் சட்டம் (இஸ்லாமிய சட்டம்) எந்தவித விதிவிலக்குமின்றி பெரியவர், சிறியவர், பணக்காரர், ஏழை என்று வித்தியாசம் இன்றி அனைவருக்கும் பொருந்தும் என்பதுடன் நீதித்துறை தீர்ப்பில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமையில்லை அதுதான் இந்த நாட்டின் பாரம்பரியம் எனவே ஷரியத் சட்டத்தை நாம் அனைவரும் பின்பற்றித்தான் ஆக வேண்டும்’ என கூறி உள்ளார்.
எனவே இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
"ஒரு பெருந்தொகையை கொடுத்து விட்டால் கொலையாளி தண்டனையில் இருந்து தப்பி விட முடியும்"
ReplyDeleteஎனவே பணக்காரர் இலகுவில் தப்பிவிடலாம். ஆனால், ஏழைகள் தப்ப முடியாது.
மற்றும் மேற்குலக நாட்டவராயினும் தப்பிவிடலாம், மூன்றாம் உலக நாட்டு மக்கள் தப்பவே முடியாது.
இப்படியான சட்டம் சரியானதா? மக்களே சிந்தித்து பாருங்கள்.
bro plz learn shariyyah (islamic law)before leave common like this. no knowlede no talk.
ReplyDelete