அமைச்சர் மர்வின் களனிக்கு வந்தால்… நான் களனியை விட்டுச் செல்வேன்!
மேல் மாகாண அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
“நான் மினுவங்கொடையின் பிரதான அமைப்பாளர். தற்காலிகமாகத்தான் நான் களனித் தொகுதியைப் பார்த்தேன். கட்சி, நிரந்தரமாக ஒருவரை நியமிக்கும்வரையே நான் அப்பொறுப்பைச் செய்கிறேன்.நிரந்தரமாக ஒருவர் நியமிக்கப்பட்டால் நான் சென்றுவிடுவேன். அதற்குத் தயாராகத்தான் நான் இருக்கின்றேன்.
களனித் தொகுதி இல்லாமற் போவது குறித்து எக்கவலையும் எனக்கில்லை. அதிலிருந்து என் கஷ்டங்கள் இல்லாமலாகும். ஏன் தெரியுமா இரண்டு வேலைகளைச் செய்யும்போது உள்ள கஷ்டம் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment