Tuesday, December 24, 2013

சத்திர சிகிச்சைகளில் ஈடுபடும் சுகாதார துறையினருக்கு வழிகாட்டல் முறை அறிமுகம் !!

பல்வேறு சத்திர சிகிச்சைகளில் ஈடுபடும் சுகாதார துறையின ருக்கான வழிகாட்டல் முறைமையொன்று இன்று அறிமுகப் படுத்தப்படவுள்ளது. சத்திர சிகிச்சைகளின் போது, நோயாளர் களுக்கு ஏற்படும் பல்வேறு அசௌகரியங்களையும், உயிராபத் துக்களையும் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப் படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால குறிப்பிட்டார்.

இந்த வழிகாட்டல்கள் அடங்கிய பட்டியல் இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் வெளியிடப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். இதேவேளை, உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 230 மில்லியன் பேர் சத்திர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங் கையில் 70 ஆயிரம் பேருக்கு வருடமொன்றில் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment