காலாவதியான மருந்துகள் மீது புதிய லேபல்களை ஒட்டிய இருவர் கைது!
நாரஹேன்பிட்டிய பகுதியில் வைத்து காலாவதியான மருந்துகள் அடங்கிய பெட்டிகள் மீது புதிய லேபல்களை ஒட்டிக்கொண்டிருந்த இருவரை வலன குற்றச் செயல் பிரிவு பொலிஸார் இன்று வியாழக்கிழமை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப பிரிவு, விநியோக பிரிவு மற்றும் வலன குற்றச் செயல் பிரிவும் சேர்ந்து ஒரு தனியார் மருந்து இறக்குமதி கம்பனியில் நடத்திய சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதுடன் காலாவதியாகும் திகதி மாற்றப்பட்ட ஹைட்ரஸோன் பூச்சு மருந்து பெட்டிகள் 4818 ஐயும் பொலிஸார் கைப்பற்றினர்.
இதைவிட 10,000 மருந்துப் பெட்டிகளும் பிடிபட்டுள்ளதுடன் இது தொடர்பில் மேலதிக விசாரணை நடப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment