தனது தற்கொலையை தானே கைப்பேசியில் வீடியோ எடுத்த மாணவன்!!
பெங்களூரில் எம்.டெக். மாணவர் ஒருவர் தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண் டார்.
பெங்களூரில் உள்ள பி.இ.எஸ்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் எம்.டெக். படித்து வந்தவர் ஹரிஷ்(26). அவர் தனது நண்பர் சேத்தன் என்பவருடன் விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்தார். இவர் நடைபெற்ற தேர்வில் சில பாடங்களில் தோல்வி அடை ந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஹரிஷ் கடந்த புதன் கிழமை மாலை 4 மணிக்கு விடுதியில் உள்ள தனது அறைக் கதவை பூட்டிவிட்டு பாத்ரூமுக்கு சென்றுள்ளார்.
பின்னர் தனது கைப்பேசியில் காணொளியை ஓன் செய்து அதை அங்குள்ள ஜன்னலில் வைத்துவிட்டு பக்கெட் மீது ஏறி கயிறை வைத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இரவு 9.45 மணிக்கு சேத்தன் வந்தபோது அறை கதவு பூட்டியிருந்தது. இதையடுத்து அவர் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஹரிஷ் தூக்கில் பிணமாகத் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பொலிசார் வழக்குப் பதிவு செய்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு ஹரிஷின் உடல் ஷிமோகாவில் இருந்து வந்திருந்த அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment