Friday, December 6, 2013

இயற்கையெய்தினார் கறுப்பின அதிபர் நெல்சன் மண்டேலா!

ஜோகன்ஸ்பர்க்:தென் ஆப்ரிக்காவின் சுதந்திர போராட்ட வீரரும்,கறுப்பின தலைவருமான நெல்சன் மண்டலோ தனது 95-வயதில் மரணமடைந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவரின் மரணம் குறித்து தற்போதைய அதிபர் ஜேக்கப் ஜூமா முறைப்படி அறிவித்தார்.

பிறப்பும் இளமையும்:@@தென்னாப்பரிக்காவில் உள்ள குலு கிராமத்தில்1918-ம் ஆண்டுஜூலை மாதம்பிறந்த நெல்சன் மண்டேலாசிறுவயது முதல் குத்து சண்டை வீரராக அறியப்பெற்றார்.இவரது முழுபெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. லண்டன் மற்றும் தென்னாப்பரிக்காவில் படிப்பை மேற்கொண்ட பின்னர் 1941-ம் ஆண்டு சட்ட கல்வியை முடித்தார். பி்ன்னர் தங்க சுரங்கம் ஒன்றில் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.தொடர்ந்து ஆப்பரிக்க தேசி்ய காங்கிரஸ் கட்சியி்ல் சேர்ந்துபல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினார்.

அரசியல் போராட்டம்: @@தென்னாப்பிரிக்காவில் பெரும்பான்மையினராக கறுப்பினர் வசித்த வந்த போதிலும்,சிறுபான்மையினராக உள்ள வெள்ளையர்களே ஆட்சி பொறப்பு வகித்தனர். இதனை கண்ட மண்டேலா1956ல் அறவழிப்போராட்டத்தை நடத்தினார்.போரட்டத்தின் வளர்ச்சியை கண்ட அரசு மண்டேலா மற்றும் அவரின் சகாக்களை கைது செய்து சிறையி்ல் அடைத்தது. 1961-ல் சிறையை விட்டு வெளியே வந்த பின்னர் கொரில்லா போர் முறையில் போரட்டத்தை துவக்கினார்.இதன் காரணமாக 1964 ஜூன் 12-ல் கைது செய்யப்பட்ட ஆயுள்தண்டனை விதி்க்கப்பட்டது.

தொடர்ந்து 27 ஆண்டுகளாக சிறை வாசத்தை அனுபவித்த பின்னர் 1990-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.அதே ஆண்டில்இந்தியாவின் பாரத ரத்னா விருதும் தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. பின்னர் 1998-ம் ஆண்டு அதிபராக தேர்வு செய்யப்பட்டார். 99-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார்.இவரி்ன் பதவிக்காலத்தில் தென்னாப்பரிக்கா பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, குஜராத், உருது மொழிகளை கற்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டது.இவரின் போராட்ட முறையை கண்டஅமெரிக்க அரசு 2008-ம் ஆண்டு வரையில் தன்னுடைய நாட்டிற்கு வருவதற்கு அனுமதி வழங்கவில்லை.

மண்டேலாவின் மறைவிற்கு ஐ.நா., வின் பொது செயலாளர் பான்-கி-மூன் ,அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்டோர்கள்இரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு நாட்டு தலைவர்கள் மண்டோலாவின் மறைவிற்கு தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com