Monday, December 9, 2013

அமைச்சர் மஹிந்தானந்தா மீது மனைவி முறைப்பாடு !

இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந் தானந்த அளுத்கமகேவினால் கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளதாக அவரது சொந்த மனைவியான அம்பன் பொல ஆஷா விஜயந்தி பெரேரா பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்துள்ளார். அமைச்சர் மஹிந் தானந்தாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணை க்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,இதனை தான் செய்திருக்க வேண்டும் என்று சந்தேகித்தே, கணவர் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுப்பதாகவும் அமைச்சரின் மனைவி முறைப் பாட்டில் தெரிவித்துள்ளார்.

கணவரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு பாதுகாப்பளிக்கு மாறும் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ள ஆஷா விஜயந்தி பெரேரா, தனது கணவருக்கு எதிராக செய்யப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இவ்வருடம் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 9 நாடாளுமன்ற உறுப்பி னர்கள் அடங்களாக 111 அரசியல்வாதிகளுக்கு எதிரான முறைப்பாடுகளும் பதிவாகி யுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.இந்நிலையிலேயே, மஹிந்தானந்தவின் மனைவியான ஆஷா விஜயந்தி பெரேரா இந்த முறைப்பாட்டினை செய்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com