இலங்கை இராணுவத்தினர் விவகாரத்தை இந்திய பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டாம் - இந்திய பாதுகாப்பு அமைச்சு!
இலங்கை பாதுகாப்பு படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது தொடர்பில் இந்திய பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டாமென இந்திய பாதுகாப்பு அமைச்சு பாராளுமன்ற செயலகத்திற்கு கோரிக் கையொன்றை முன்வைத்துள்ளது. இந்தியாவில் இலங்கை படையினருக்கு பயிற்சிகளை அழிப்பதற்கு தமிழக அரசி யல்வாதிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், திராவிட முன்னேற்ற கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு தொடர்ந்தும் கோரி க்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக இந்திய லோக் சபாவில் விவாதம் ஒன்று நடத்துவதற்கு அனும திக்க வேண்டுமென அவர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இவ்வாறான விவாதத்திற்கு அனுமதியளிக்க வேண்டாமென இந்திய பாதுகாப்பு அமைச்சு பாராளுமன்ற செயலகத்திடம் தெரிவித்துள்ளது.
இலங்கை உட்பட வெளிநாடுகளின் படை வீரர்களுக்கு பயிற்சியளிப்பது அந்நாடு களின் கோரிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகவும், இது பரஸ்பர பாதுகாப்பு தொடர்பான பரிமாற்றம் எனவும், இந்திய தேசத்தின் நலனை அடிப்படையாக கொண்டே இவ்வாறான பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதுடன், நாடுகளுக்கு இடையில் நல்லெண் ணத்தை கட்டியெழுப்புவதற்கான ராஜதந்திர ரீதியிலான பாதுகாப்பு நடைமுறை களில் இதுவும் ஒன்றெனவும் அவ்வமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இவ்வாறு இந்திய படைகளும் கூட வெளிநாடுகளில் இது போன்ற பயிற்சிகளை பெற்று வருவதாகவும் இந்திய பாதுகாப்பு அமைச்சு அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
0 comments :
Post a Comment