வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் நபர்கள் தொடர்பான பதிவுகள் விமான நிலையத்தில் நிறுத்தம்!
வெளிநாடுகளுக்கு தொழில் பெற்றுச் செல்லும் நபர்களை விமான நிலையத்தில் பதிவு செய்யும் நடவடிக்கைகளை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியுடன் நிறுத்த உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி முகாமையாளர் மங்கள் ரந்தெனிய தெரிவித்தார்.
தொழில் ஒப்பந்தங்களை பரீட்சிப்பதில் ஏற்படும் தடைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இனி வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்லும் சகலரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனக்குறிப்பிட்டார்.
எனவே இனி வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பை பெற்றுச் செல்வோர் விமான நிலையத்திற்கு செல்லும் முன்னர் பணியகத்தில் பதிவுசெய்தமைக்கான சான்றுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
0 comments :
Post a Comment