Tuesday, December 10, 2013

வெள்ளவத்தையில் போலி பட்டபடிப்புச் சான்றிதழ்கள் தயாரித்த இருவர் கைது!!

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் முகா மைத்துவ கணக்காய்வாளர் அலுவலகம் ஒன்றில் போலி ஆவ ணங்கள் விநியோகிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடுவெல மற்றும் பியகம பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே நேற்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படும்போது இவர்களிடம் இருந்து போலி ஆவணங்கள் என சந்தேகிக்கப்படும் ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் பட்டபடிப்புச் சான்றிதழ்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை போலி ஆவணங்களை தயார் செய்வதற்காக இவர்கள் பயன்படுத்திய உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் இன்று புதிய கடை மூன்றாம் இலக்க நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு ள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com