சவுதியில் இருந்து மனைவியை வரவழைத்து தாருங்கள்! வேலைவாய்ப்பு பணியகத்திற்கு நுழைந்த நபர் தற்கொலை முயற்சி!
சவுதியில் பணிபுரிக்கின்ற தனது மனைவியை நாட்டுக்கு வரவழைத்து தருவதற்கு வேலைவாய்ப்பு பணியக அதிகா ரிகள் உரியநடவடிக்கை எடுக்கவில்லையெனக்கூறி நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமொன்று பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்று ள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது தன்னுடைய மனைவி சவூதி அரேபியாவில் தொழில்புரிவதாகவும் அங்கு அவர் பல்வேறு இடையூறுகளுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் அவரை உடனடியாக நாட்டுக்கு திரும்பி அழைத்துவருமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் அவர் கோரியுள்ளார்.
அவரை நாட்டுக்கு திருப்பி அழைப்பதாயின் மூன்றரை இலட்சம் ரூபா தேவையென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்ததையடுத்தே அவர் தனது நான்கு பிள்ளைகளுடன் பணிகத்திற்கு இன்று வருகைதந்து தற்கொலைக்கு முயற்சித் துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பத்தரமுல்லையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன்பாகவே அவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொள்வதற்கு முயன்றுள்ளார். ஆபத்தான நிலையிலிருந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
அநுராதபுரம் புளியங்குளத்தைச்சேர்ந்த 38 வயதான நான்கு குழந்தைகளின் தந்தையான இந்திக பிரசாத் என்பவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment