வடக்கு, கிழக்கு சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழில் சேவை - பொலிஸ்!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் மொழி மூலம் சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என பொலிஸ் தெரிவித்துள்ளது.வடக்கு மற் றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள சகல பொலிஸ் நிலையங் களிலும் தமிழ் மொழி தெரிந்த உத்தியோகஸ்தர்கள் சேவை யில் அமர்த்தப்பட் டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
ரிவி தெரணவின் ´360´ எனும் அரசியல் நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.நேற்று (02) இரவு இடம்பெற்ற நிகழ்ச்சியில், வட மாகாணத்திலுள்ள எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் தமிழ் மொழி மூலம் முறைப்பாட்டை பதிவு செய்வதற்கு உத்தியோகத்தர்கள் எவரும் இல்லை என சுமந்திரன் தெரிவித்தார்.
இதன்போது, வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலுள்ள பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் மொழி மூலம் சேவைகள் வழங்கப்படுவதாக தொலைபேசியில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment