சிவசுப்ரமணிய ஆலயம் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்! காளி சிலையும் உடைப்பு!
இந்து ஆலயங்கள் மீது இனந்தெரியாத நபர்களினால் கடந்தநாட்களாக தாக்குதல்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் ஹாலிஎல, உடுவர வலஸ்பெந்த மேற் பிரிவு சிவசுப்ரமணிய ஆலயம் இனந்தெரியாத நபர்களினால் இன்று சேதமாக்கப்பட்டுள்ளதுடன் ஆலயத்திலுள்ள காளி சிலையும் உடைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் மீதான தாக்குதலை கண்டித்து உடுவரை தோட்டத்திலுள்ள தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் இன்று ஈடு பட்டதோடு ஆலயத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய வர்களை இனங்கண்டு கைது செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல வருடங்களாக புனர்நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் சில தினங்களுக்கு முன்பே இடம்பெற்றுள்ளது. ஆலயத்தின் மீது இவ்வாறான ஒரு செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்கதும், வருந்த கூடிய விடயமுமாகும் எனவும் இக்கோயில் மீதான தாக்குதல் இனங்களுக்கிடையே முரண்பாடொன்றை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் எனவும் பசறை தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment