Thursday, December 12, 2013

வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் பலத்காரம் செய்த யோகா ஆசிரியர்!

கோவா மாநில தலைநகர் பனாஜியில் வாடகை வீடு ஒன்றில் தனியாக வசித்துவந்த 25 வயது டச்சு நாட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த யோகா ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது அவர் வசித்துவந்த பகுதியில் இருந்த கிருஷ்ணா சர்மா என்பவரிடம் யோகா கற்றுவந்தநிலையில் அவர்கள் இரண்டு பேரும் நேற்று அனுஜாவில் நடந்த விருந்தில் கலந்து கொண்டுவிட்டு யோகா ஆசிரியர் கிருஷ்ணா சர்மாவின் வாகனத்தில் அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டிற்குள் சென்ற சர்மா அந்த பெண்ணை பலவந்தமாக பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகியதை தொடர்ந்து குறித்த பெண் அங்குள்ள பொலிஸ் நிலையத்தில் பலாத்காரம் தொடர்பாக புகார் கொடுத்தார்.

இதனை தொடரந்து போலிஸ் சர்மாவை தேடிக்கொண்டிருந்த போது சந்தேக நபர் மும்பைக்கு தப்பித்து ஓட தாபோலிம் விமான நிலையத்திற்கு சென்றபோது அவரை போலிஸ் கைது செய்ததுடன் சர்மாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com