Friday, December 20, 2013

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனான சந்திப்பை புறக்கணித்த ஈ.பி.டி.பி !

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கும் மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்க ளுக்கும் இடையில் இன்று யாழ். பொது நூலகத்தில் அமைந் துள்ள வட மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் பங்கேற்கவில்லை.

இலங்கை உள்ளூரா ட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் யாழ்ப்பாணத்திலுள்ள 21 உள்ளூராட்சி மன்றங்களில் 17 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மட்டுமே இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் ஆட்சி அதிகாரத்தின் கீழிருக்கின்ற யாழ்.மாநகர சபை, நெடுந்தீவு பிரதேச சபை, வேலணை பிரதேச சபை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபை ஆகியவற்றின் தலைவர்களை இந்த கலந்துரையாடலில் பங்கேற் கவில்லை.

இதே வேளை இக்கலந்துரையாடலில் உள்ளூராட்சி மன்றங்களினால் முன்னெடு க்கப்பட வேண்டிய பிரதேச மட்ட அபிவிருத்தி மற்றும் நிர்வாக ஒழுங்கு முறைகள், உள்ளூராட்சி மன்றங்களிற்கான சட்ட அமுலாக்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com