தன் வெறும் கண்களாலேயே மனித உடலுருப்புகளை ஊடுருவி பார்க்கும் அதிசய ஆற்றல் கொண்ட அதிசய பெண் !! (வீடியோ)
கண்களில் ஊடுகதிர்(X-ray) சக்தியை கொண்ட ரஷ்ய பெண் ஒருவர் மருத்துவ நிபுணர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியு ள்ளார்.கடந்த 1987ஆம் ஆண்டு ரஷ்யாவில் சரன்ஸ்க் என்ற இடத்தில் பிறந்தவர் நிகோலெயவ்னா நடாஷா டெம் கினா. இவர் தன் வெறும் கண்களாலேயே மனித உடலுருப்புகளை ஊடுருவி பார்க்கும் அதிசய ஆற்றல் பெற்று திகழ்கிறார். இதனையறிந்த அவ்வூர் மக்கள் இவரது பார்வை பட்டாலே நோய் குணமாகிவிடும் என நம்பத்தொடங்கி டெம்கினாவை வீடுதேடி வரதொடங்கினர்.
மருத்துவரின் வயிற்றின் எந்த பகுதியில் அல்சர் கட்டி உள்ளது என்றும், மற்றொரு பெண்ணின் உடலில் உள்ளது புற்றுக்கட்டி அல்ல என்றும் தீர்க்கமாக கூறி இவர் மருத்துவ நிபுணர்களையே திகைக்க வைத்துள்ளார்.மேலும் இவர் தனது பத்தாவது வயதில் தாயின் உடல் உள்ளுறுப்புகளை, வெறும் கண்ணால் பார்க்க தொடங்கி யதால் இவரது புகழ் காலப்போக்கில் உலகெங்கும் பரவி வருகிறது.
0 comments :
Post a Comment