நடைபெறவுள்ள தென், மேல் மாகாண சபைத் தேர்தலில் கலைஞர்கள்...!
கலைக்கப்படவுள்ள மேல் மாகாண சபைத் தேர்தலில் பிரபல பாடகர் அமர் பெரேரா ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து போட்டியிட வுள்ளார் எனத் தெரியவருகின்றது. தற்போது அதுசார்ந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரியவ ருகின்றது.
2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கலைக்கப்படவுள்ள மேல் மாகாண சபை மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் நடாத்துவதற்காக ஆவன செய்யப்பட்டுவருகின்றது.
இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் நடிகர்களும் நடிகைகளும் பாடகர்களும் பாடகிகளுமே அதிகம் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து மேல் மாகாண சபைக்காக நில்மினி தென்னகோன், கயேஷா பெரேரா ஆகிய கலைஞர்களும், பாடகர் மதுமாதவ அரவிந்தவும் போட்டியிடவுள்ளார். அத்தோடு கீதா குமாரசிங்கள, அனர்கலீ ஆகர்ஷா எனும் இருவரும் தென் மாகாண சபைக்காகப் போட்டியிடவுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தென் மாகாண சபைக்காக நதீஷா ஹேமமாலீ போட்டியிடவுள்ளதுடன், மேல் மாகாண சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பாடகர் அமல் பெரேராவுடன் திரைப்பட இயக்குநர் பெனாட் ரத்நாயக்கவின் மைந்தன் உதார ரத்நாயக்கவும் போட்டியிடவுள்ளனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment