‘கஸினோ’ விவாத்த்திற்குப் பயந்து லக்ஷ்மன் யாப்பா ஒளிந்துகொள்கிறார்!
தன்னால் முன்வைக்கப்பட்ட கஸினோ சட்டமூலம் தொடர்பில் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவுக்கு திறந்ததொரு விவாதத்திற்கு வருமாறு பலமுறை அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அவர் அதிலிருந்து மெல்ல விலகிச்செல்கின்றார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா குறிப்பிடுகிறார்.
தான் எந்தவொரு நேரமாயினும் சரி… தொலைக்காட்சிச் சேவையொன்றில் கஸினோ தொடர்பில் திறந்ததொரு விவாத்த்திற்குத் தயாராகவிருப்பதாக மீண்டும் அமைச்சருக்கு சவால் விடுவதாக அவர் குறிப்பிடுகிறார்.
“கஸினோ தொடர்பில் விவாத்த்திற்கு வருமாறு நான் பலமுறை லக்ஷ்மன் யாப்பாவுக்கு அழைப்பு விடுத்தேன். ஆயினும், அமைச்சர் அதிலிருந்து நழுவிச் செல்கின்றார். ஒளிந்துகொள்கிறார்… நான் மீண்டும் சவால் விடுக்கின்றேன். பயமில்லாமல் விவாதத்திற்கு வாருங்கள். எந்தவொரு தொலைக்காட்சிச் சேவையிலும் எந்தவொரு நேரத்திலும் விவாதிக்க நான் தயாராக இருக்கின்றேன். பயமில்லாமல் தனியாக வாருங்கள். கஸினோவுக்குப் பொறுப்பான அமைச்சர் முழுமையாக மறைத்துக்கொண்டுள்ள ஆடையைக் கலைக்க நான் தயாராக இருக்கிறேன்“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment