சில நாடுகள் இலங்கையின் துரித அபிவிருத்தி குறித்து சகிப்புத் தன்மையுடன் நோக்காமல் இருப்பது நியாயமற்றது - அகாஷி
23 வது தடவையாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண் டுள்ள ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாஷி ஜனாதி பதியை சந்தித்த பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். கற்றபாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து சகவாழ்வு திட்டங்கள் குறித்தும் கருத்து பரிமாற்றி கொண்டனர்.
இவ்வாண்டு முற்பகுதியில் ஜனாதிபதி ஜப்பானுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அகாஷியை சந்தித்திருந்தார். அந்த சந்திப்பின் பின்னரே அகாஷி இம்முறை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இலங்கையில் போதியளவு பல்வேறு வளங்கள் காணப்படுவதாகவும் சில அபிவிருத்தியடைந்த நாடுகள் இலங்கையின் துரித அபிவிருத்தி குறித்து சகிப்புத்தன்மையுடன் நோக்காமல் இருப்பது நியாய மற்றது என்றும் அகாஷி தெரிவித்தார்.
அத்துடன் யுத்தத்திற்கு பின்னர் இலங்கையின் அபிவிருத்தி பாராட்டத்தக்கது என இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்த போதே இதனை தெரிவித்தார்.
துரிதமாக முன்னேறி செல்வதே இலங்கை அரசாங்கத்தினதும், இலங்கை மக்களினதும் நோக்கமாகவுள்ளது. இருக்கின்ற வளங்களை கொண்டு பெற்றுள்ள முன்னேற்றங்கள் பாராட்டத்ததக்கவை என்றும் அவர் தெரிவித்தார். இலங்கைக் கான ஜப்பானிய தூதுவர் நொபுஹிதோ ஒபோ, அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளியுறவு அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம, ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் வசந்த கரன்னாகொட ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
2 comments :
This develops has been made only by Hon. President Rajapakshe vadakkin vasantham programes.
not by a TNA.(tamil national alliance or LTTE DIASPORAS)
This develops has been made only by Hon. President Rajapakshe vadakkin vasantham programes.
not by a TNA.(tamil national alliance or LTTE DIASPORAS)
Post a Comment