மருமகனை கல்லால் தாக்கி கொன்ற மாமா!!
கலஹா, தெல்தோட்ட முஸ்லிம் பிரதேசத்திதைச் சேரந்த 24 வயதான இளைஞர் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றுக் காலையில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
மொஹமட் பாருக் மொஹமட் பாஹிம் என்பவரே உயிரிழந்த வராவார். மாமா மருமகனுக்கிடையில் கடந்த சில காலமாக ஏற்பட்டு வந்த தகராறே இக்கொலைக்கு காரணமென பொ லிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.
கொலையுண்டவரின் மாமனாரனன 42 வயது நிரம்பிய சந்தேக நபர் நித்திரையி லிருந்த தனது மருமகனை கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார்.இறந்தவர் தனது மாமாவை இரண்டு நாட்களுக்கு முன்னால் தடியால் தாக்கி காயப்படுத்தியுள்ளதா கவும் விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது. இக்கொலை தொடர்பான மேல திக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகிகின்றனர். சந்தேக நபர் நேற்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.
0 comments :
Post a Comment