நெல்சன் மண்டேலாவின் இறுதி நிமிடங்கள் - மெகசிவ்
நெல்சன் மண்டேலாவின் இறுதி நிமிடங்கள் தொடர்பில், அவரது மகள் பீ பீ சீ க்கு கருத்து வெளியிட்டுள்ளார். கறுப்பின மக்களின் தலைவர் நெல்சன் மண்டேலா, தனது 95 ஆவது வயதில் காலமானார். இந்நிலையில் அவரது இறுதி மணித்தியாலங்கள் சிறந்த முறையில் காணப்பட்ட தாக, அவரது மகள் மெகசிவ் (Makaziwe) தெரிவித்துள்ளார்.
தான் இறக்கப்போவதை உணர்ந்த மண்டேலா தனது மனைவி கிரேஸ், பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளிடம் தனக்கு விடைகொடுக்குமாறு கேட்டுக்கொண்டதாக மெகசிவ் குறிப்பிட்டுள்ளார். மேலும் மண்டேலாவினால் கண்களை திறந்து பார்க்க முடியாத நிலை காணப்பட்டாலும், குடும்ப உறுப்பினர்கள் , மண்டேலா மீது அளவற்ற அனபு கொண்டிருந்ததை, அவரால் உணரக்கூடியதாக இருந்ததாகவும், அவரது மகள் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இன்றைய தினம் தென்னாபிரிக்காவின் ஜொஹன்னர்பேர்க்கில் நகரில், நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற வுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ,மிச்செல் ஒபாமா, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் மற்றும் பல நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக தென்னாபிரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மறைந்த நெல்சன் மண்டேலாவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 15 ம் திகதி , அவரது சொந்த ஊரான குனுவில் நடைபெறவுள்ளது. இறுதிச்சடங்கை பிரமாண்டமான முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் இஸ்மாயில் வாடி தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கறுப்பின மக்களின் தலைவர் நெல்சன் மண்டேலாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று தென்னாபிரிக்கா பயணமா னார் என்பது குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment