உங்கள் கைவிரல் மோதிரத்தில் இனி மின்னஞ்சல் வரை பார்க்கலாம்!
ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் வாட்ச் என அனைத்தையும் மறந்துவிடுங்கள் இனி வந்துவிட்டது ஸ்மார்ட் மோதிரம்(Smarty Ring) விரைவில் சந்தைக்கு வரவுள்ள இந்த புதிய மோதிரங்களில் சிறிய LCD ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது.
பொதுவாக நேரத்தைக் காட்டும் இம்மோதிரங்கள் ஸ்மார்ட் ஃபோனுடன் புளூடூத் தொடர்பு மூலம் எந்நேரமும் தொடர்பில் இருப்பதனால் உங்கள் ஸ்மாட் ஃபோனுக்கு வரும், மின் அஞ்சல்கள், குறுஞ்செய்திகள், பேஸ்புக், டுவிட்டர், ஸ்கைப் நோட்டிபிகேஷன் என அனைத்தையும் இம்மோதிரத்திலேயே அறிந்து கொள்வதுடன் ரிமோர்ட் காண்ட்ரோலாகவும் இதனை பாவிக்க முடியுமாம்.
இம்மோதிரத்திற்கு மூளையாக செய்ற்பட்டவர் சென்னையை சேர்ந்த அஷோக் குமார் எனும் ஒரு பொறியியலாளர்.
இந்த புதிய ஸ்மார்ட் ரிங் 24 மணிநேரமும் இயங்கும் பேட்டரி லைஃப் கொண்டிருப்பதுடன் ஆண்ட்ராய்டு, iOS என எந்த ஆப்ளிகேஷன் தொலைபேசியுடனும் பொருத்தப்படக் கூடிய ஆப்ளிகேஷனை உங்களது ஆண்ட்ராய்டு கைத் தொலைபேசிகளில் தரவேற்றம் செய்து கொண்டால் சரி.
கைத்தொலைபேசியை கொண்டுசெல்ல முடியாத இடங்களுக்குள்ளும் இந்த ஸ்மார்ட் ரிங்குடன் புகுந்துவிடலாம் என்பது கூடுதல் பிளஸ் இதனைவிட நீங்கள் நீச்சலடிக்கும் போது கூட லைவ் அப்டேட்டை பார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment