கணவன் சுட்டுக் கொலை செய்யப்பட்டமைக்கு மனைவி காரணமா? நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரின் மனைவி கைது
சுட்டுக் கொலை செய்யப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் கொலை விவகாரம் தொடர்பில் அவரது மனைவி ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெடுந்தீவிலுள்ள அவரது வீட்டில் வைத்தே இவர் நேற்று நள்ளிரவு (03) கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியனின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர் கந்தசாமி கமலேந்திரன் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 comments :
ஈபீடீபீ க்கு சனியன் பிடிச்சுட்டுது.
Post a Comment