Wednesday, December 25, 2013

பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - அங்குலானையில் சம்பவம்!

மொரட்டுவ அங்குலானை பிரதேச பொலிஸாருக்கும் மக்களு க்கும் இடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை அங்குலானை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றை சுற்றி வளைக்கச் சென்ற பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டது.

எனினும் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். நிலைமையை கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக பொலிஸ் குழுக்கள் பல சம்பவ இடத்திற்கு சென்றனர்.

சம்பவம் தொடர்பில் அங்குலானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com