வவுனியா வேப்பங்குளத்தில் துப்பாக்கிதாரிகள் கைவரிசை: முன்னாள் கிராமசேவையாளர் காயம்
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் வீட்டினுள் புகுந்து சுட்டதில் வவுனியா வைரவபுளியங்குளத்தில் கிராமசேவையாளராக பணியாற்றிய சற்குணசோயோன் பாலசுந்தரி (வயது 60) என்ற பெண் காயமடைந்து வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது,
நேற்று இரவு 8.30 மணியளவில் குறித்த முன்னாள் கிராமசேவையாளர் வீட்டில் தனிமையாக இருந்த சமயம் வீட்டிற்கு மோட்டர் சைக்கிளில் சென்ற இருவர் வீட்டினுள் நுழைய முற்பட்ட போது கிராமசேவையாளர் கதவை சாத்தியுள்ளார். இதன்போது துப்பாக்கிதாரிகள் கதவின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் துழைத்துக் கொண்டு சென்ற சன்னம் குறித்த பெண்ணின் தொடையில் பட்டுள்ளது. அதனையடுத்து துப்பாக்கிதாரிகள் தலைமறைவாகியுள்ளனர். இது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment