ஷியாம் கொலையுடன் ரவிந்து வாஸின் கைவிரலடை யாளம் பொருந்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி வர்த்தகரான மொஹமட் ஷியாம் கொலை யுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்ட வாகனத்தில் காணப் பட்ட விரலடையாளதுடன் ரவிந்து வாஸ் குணவர்தனவின் விரலடையாளம் பொருந்தவில்லை என விரலடையாள நிபுணர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறி யுள்ளனர்.
குற்றப்புலனாய்வு பிரிவினர் தமது விசாரணைகளைத் தொடர்பதால் சந்தேகநபர் களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி முனசிங்க நீதவானிடம் கோட்டுக்கொண்டார். இதனையடுத்து சந்தேகநபரை ஜனவரி 6 ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஏ.எம். சஹாப்தீன் நேற்று உத்தரவிட்டார்.
ஷியாம் கொலை வழக்கில் ரவிந்து வாஸின் தந்தையான வாஸ் குணவர்த்தன முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment