பெட்ரோல் அருந்திய குழந்தை பலி!!
பிளாஸ்டிக் போத்தல் ஒன்றில் எஞ்சியிருந்த பெட்ரோலை அருந்திய ஒன்றரை வயது குழந்தை ஒன்று, உயிரிழந்த சம்பவம் பதுளை ஸ்பிரிங்வெளி தோட்டத்தின் மீமலை பிரிவில் நடந்துள்ளது.
சம்பவத்தில் ஜோதிராஜ் விஜி என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.மோட்டார் சைக்கிளுக்கு பயன் படுத்துவதற்காக குழந்தையின் தந்தை வாங்கி வந்த பெட்ரோலை அவர்,வண்டிக்கு பயன்படுத்திய பின்னர் போத்தலை முற்றத்தில் வீசி எறிந்துள்ளார்.
சகோதரனுடன் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை போத்தலில் இருந்து பெட்ரோலை அருந்தியுள்ளது.குழந்தை வாந்தி எடுத்ததால், உடனடியாக தோட்டத்தில் உள்ள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதிலும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments :
Post a Comment