Sunday, December 15, 2013

புகை பிடிக்கும் பழக்கத்திலிருந்து முற்றாக விடுபட உதவும் மூலிகை வைத்திய முறைகள்!

புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதனை நிறுத்த வேண்டும் என்று முடிவெடுப்பது எளிதாக இருந் தாலும் நடைமுறையில் அந்த பழக்கத்தை நிறுத்துவதற்கு நீங்கள் கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். புகைப்பழக்கத்தை நிறுத்த மூலிகை வைத்திய முறை ஒன்றும் உள்ளது. தற்போது அந்த மூலிகை வைத்திய முறைகள் வெகு வேகமாக பிரபலமாகி வருகின்றன.

புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த நீங்கள் மூலிகை வழிமுறையைத் தேர்ந்தெடுக்கும் போது, நிக்கோடினில் இருந்து விடுபடுவதற்காக கடுமையாக போராடக் கூடிய பல்வேறு மூலிகைகளை உங்களுக்கு தருவார்கள்.ஒவ்வொரு அறிகுறிக்கும் ஏற்ற வகையிலான பல்வேறு மூலிமை மருந்துகளும் இதில் உள்ளன. இங்கே புகைப் பழக்கத்திலிருந்து விடுபட ஏற்ற சில பிரபலமான மூலிகை மருந்துகள் தரப்பட்டுள்ளன......

St. John’s wort
இது புகைப்பழக்கத்தை ஒழிப்பதற்கான பிரபலமான மூலிகை மருந்துகளில் ஒன்றாகும். இது உடலை அமைதிப்படுத்தவும், ஓய்வெடுக்க வைக்கவும் செய்து, நிக்கோடினின் பிடியிலிருந்து விடுபட விரும்புபவர்களின், மன அழுத்தம் மற்றும் போராட்டத்தை குறைக்கவும் செய்யும்.

Lobelia
இந்த மூலிகை நிக்கோடின் செய்யும் செயல்களைப் போன்றே அடிமையாக்காத வகையில் உங்களுடைய மூளையில் செய்யும் தன்மை கொண்டாதாகும். எனவே இது புகைப் பழக்கத்திலிருந்து விடுபட உதவும் மிகச்சிறந்த மூலிகைகளில் ஒன்றாக உள்ளது. சந்தைகளில் விற்கப்படும் புகைப் பழக்கத்தை நிறுத்தும் சில பொருட்களில் இந்த மூலிகையின் சாறுகள் பயன்படுத்தப்படுகின்றன.

Blue vervain
ப்ளூ வெர்வெய்ன் மூலிகையானது இயற்கை முறையில் அமைதிப்படுத்தும் காரணியாகச் செயல்பட்டு உங்களுடைய மன அழுத்தம், பயம், பதட்டம் மற்றும் போராட்டத்தை குறைக்கவும் உதவி செய்து உங்களை சற்றே ஓய்ந்திருக்க செய்யும். இந்த வகையில் நீங்கள் நிக்கோடின் பிடியிலிருந்து வெளிவரும் போது ஏற்படும் தடங்கல்களிலிருந்து உங்களை விடுபட வைத்து, உங்களுக்கு மீண்டும் சிகரெட் பிடிக்கும் எண்ணம் வராமல் தடுக்கும் வைக்கும்.

Peppermint
நிக்கோடினில் இருந்து விடுபடும் போது ஏற்படக் கூடிய பக்க விளைவுகளாக குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை உள்ளன. இந்நேரங்களில் பெப்பர்மின்ட் குமட்டலை குறைத்து, ஓய்வெடுக்க தூண்டும் காரணியாக சிறப்பாக செயல்படுகிறது. இதற்கு மயக்கமூட்டவும் மற்றும் வலியை-குறைக்கவும் செய்யும் திறன் உள்ளது.

Korean ginseng
உடலின் சக்தி அளவுகளை உயர்த்தவும் மற்றும் மன அழுத்தத்துடன் இணக்கமாக செயல்படச் செய்யவும் உதவும் சக்தி வாய்ந்த ஊக்கியாக கொரியன் ஜின்செங் செயல்படுகிறது. நீங்கள் புகைப் பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, உங்களுக்கு அடிக்கடி மன அழுத்தமும், மந்த நிலையும் ஏற்படும். ஜின்செங் பயன்படுத்துவதன் மூலம் இந்த புகை ஒழிப்பு அறிகுறிகளிலிருந்து விடுபட முடியும்.

Mother wort
இது அமைதிப்படுத்தும் திறன் கொண்ட மூலிகைகளில் ஒன்றாகும். இது பயத்தில் இருக்கும் போது அமைதியை தூண்டுகிறது. நீங்கள் புகைப் பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்து வருகையில், உங்களுக்கு அடிக்கடி பய உணர்வு தோன்றும். மதர்வோர்ட் மூலிகை இந்த பய உணர்வை போக்க உங்களுக்கு உதவுகிறது.

Black cohosh
பதட்டம் மற்றும் பயத்தை சரி செய்து, அமைதியை ஏற்படுத்த பயன்படுத்தப்படும் பிரபலமான மூலிகையாக இது உள்ளது. விடுபட்டு வரும் வேளைகளில் இவை மிகவும் சாதாரணமாக தென்படும் அறிகுறிகளாதலால், அவை உங்களை மீண்டும் புகை பிடிக்க வைக்கத் தூண்டுகின்றன. ப்ளாக் கோஹோஸ் மூலிகை உங்கைள நிக்கோடினில் இருந்து விடுபட உதவும் முதன்மையான மூலிகையாக உள்ளது.

Slippery elm

புகைப் பழக்கத்தை நிறுத்துவதால் சில நேரங்களில் செரிமானக் கோளாறுகளும் மற்றும் அஜீரணத்தால் மிகவும் அதிகமாக வசதியின்மையும் தோன்றும். ஊட்டச்சத்துக்கள் மிகுந்து மற்றும் எளிதில் செரிமானமாக இந்த மூலிகை உதவுவதால், புகைப் பழக்கத்திலிருந்து விடுபடும் போது இது மிகவும் சிறந்த உணவாக உள்ளது.....!

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com